Updated Travel Procedure by Emirates | Shops remain Open during Salah.

Emirates புதுப்பிக்கப்பட்ட பயண வழிமுறை | தொழுகை நேரம் உட்பட, வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரலாம்
Emirates New Travel Procedures
துபாயின் முதன்மை விமான நிறுவனமான எமிரேட்ஸ் நிறுவனம், துபாய்க்கு வரும், துபாயில் இருந்து செல்லும் மற்றும் துபாய் வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, PCR சோதனை, விசா மற்றும் immigration ஆகியவற்றில் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை அறிவித்துள்ளது. அனைத்து சுற்றுலாவாசிகளும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுகை (பிரார்த்தனை) நேரம் உட்பட, வேலை நேரம் முழுவதும் வணிக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரலாம் என்று சவுதி சேம்பர்ஸ் கூட்டமைப்பு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
Read More: முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம்.
தேசிய தொழிலாளர் ஆய்வகத்தின் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும், இதுவரை 142,335 சவுதி குடிமக்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இதில் 59 சதவீதம் பேர் அதாவது 83,713 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையமும், Guests of God Service Program நிறுவனமும், STC நிறுவன குழுமத்துடன் ஒன்றிணைந்து புதிய “NUSK” smart bracelet என்ற சேவையை சவுதி அதிகாரிகளால் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஹஜ் யாத்ரீகர்களின் தனிப்பட்ட தரவு, அவர்களின் உடல்நிலை, இரத்த ஆக்ஸிஜன் அளவுகள், மற்றும் துடிப்பு வீதத்தை அளவிடுவது தொடர்பான சுகாதார நிலை தரவை கண்காணிக்கும் என்றும், மேலும் அவசர மருத்துவ அல்லது பாதுகாப்பு உதவி சேவைகளை உள்ளடக்கி, யாத்ரீகர்களுக்கு எளிதான புனித யாத்திரை அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Watch More: Gulf Tech & News
ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்பதற்க்கான, முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, புனித மசூதிகளில் பொதுமக்களுக்கான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு, அனுமதியை நிறுத்தியுள்ளது ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம்.
விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல்களுக்காக 100 மின்னணு திரைகள் மக்கா பள்ளிவாசல் மற்றும் அதன் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளது என புனித மசூதிகளின் பொது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதுவரை சவுதியில் 587 தடுப்பூசி மையங்கள் மூலம் 21 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.