EV Lab pop-up Cars-Majid Al-Futtaim | Jawwy TV Free for 1 Month | சவூதி செய்திகள்

EV Lab pop-up Cars-Majid Al-Futtaim | Jawwy TV Free for 1 Month | சவூதி செய்திகள்
மின்சார வாகனங்களை, சமூகத்திற்கு நெருக்கமாகக் கொண்டுவருவதற்கும், தூய்மையான போக்குவரத்து இயக்கத்தைத் தழுவுவதற்கும், குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பதற்கும் Majid Al Futtaim நிறுவனத்துடன் இணைந்து Dubai Summer Surprises (DSS) 2021 இன் நிகழ்வின் போது, சிறப்பு EV pop up கார்களை அறிமுகப்படுத்தப்போவதாக EV Lab அறிவித்துள்ளது.
ஜெர்மனியை மையமாக கொண்ட சொகுசு கார் உற்பத்தியாளரான ஆடி கார் நிறுவனம், அனைத்து மின்சார SUV களான E-Tron மற்றும் E-Tron Sports ஆகியவற்றிற்கான முன்பதிவுகளை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
அனைத்து வகையான போக்குவரத்திலிருந்தும் zero emissions என்று சொல்லக்கூடிய நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதை நோக்கமாகக் கொண்ட பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக 2040 ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கனரக சரக்கு வாகனங்களின் விற்பனையை தடை செய்ய உள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கான பயணத்தடையை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
Read More: Updated Travel Procedure by Emirates | Shops remain Open during Salah.
ஈத் பண்டிகையை முன்னிட்டு Jawwy TV Application ஐ ஒரு மாதம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் அதன்படி July 17 முதல் ஆகஸ்ட் 17 வரை இந்த இலவச Jawwy TV application ஐ mystc application வழியாக activate செய்யலாம் எனவும் அதன் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஹஜ் யாத்ரீகர்களைப் பெறுவதற்கும் அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சை சேவைகளையும் வழங்குவதற்காக 145 படுக்கைகள் கொண்டு மினா அல்-வாடி மருத்துவமனை தயார்நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் (MoH) அறிவித்துள்ளது.
ரியாதில் கொரேனா விதிமீறலில் ஈடுபட்ட 103 பேர் சவுதி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
Watch More: Gulf Tech & News
சவுதி அரேபியாவில் தொழுகை நேரங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சவுதி சேம்பர்ஸ் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜித்தாவின் கிங் அப்துல்அஜுஸ் சர்வதேச விமான நிலையம் ஹஜ் யாத்ரீகர்களைப் வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையின் உள்ளது என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.