தமிழ்

இதெல்லாம் பொழப்பா…? புலம்பல் பொன்னம்பலம்…!

இதெல்லாம் பொழப்பா…?

அதிகாலை சீக்கிரமா எழுந்திருக்கவில்லையென்றால் Toilet ல் இடம் கிடைக்காது என்பதற்காக அலாரம் வைத்து வேகமாக எழுவது…! இதெல்லாம் பொழப்பா…?

வந்தது ஓரு வேலை… பாக்குறது வேற வேலை… படிச்சது ஒன்னு…பாக்குறது வேறொன்னு… இதெல்லாம் பொழப்பா…?

ஊர்லயே நல்ல வேலை கிடைச்சது, அத விட்டுட்டு இங்க நல்ல சம்பளம் கிடைக்கிதுன்னு வந்து மாட்டிகிட்டேன்… இதெல்லாம் பொழப்பா…?

இதெல்லாம் பொழப்பா-2
இதெல்லாம் பொழப்பா-2

வரிசைல நின்னு சாப்பாடு வாங்குறது… வரிசைல நின்னு பஸ் ஏறுவது… இப்படியே எதற்கெடுத்தாலும் வரிசை…வரிசை… இதெல்லாம் பொழப்பா…?

See also  The decision to nationalize marketing professions

முதலாளிகிட்ட நல்ல பேர் எடுப்பதற்காக முதலாளிக்கு புடிக்காதவன பத்தி குறையா சொல்றது இன்னும் பச்சையா சொல்லனும்னா செம்படிக்கிறது… இதெல்லாம் பொழப்பா…?

வயசுல கொறஞ்சவனா இருந்தாலும் அல்லது ஒரே வயசுக்காரனா இருந்தாலும் அவன் பெரிய பதவில இருக்கான் என்பதற்காக வேற வழியில்லாம எப்போதும் வணக்கம் வைக்கிறது… இதெல்லாம் பொழப்பா…?

சம்பள தேதியை எதிர்பார்த்தும், தாய்நாட்டிற்கு போக வேண்டிய மாதத்த எதிர்பார்த்தும் ஒவ்வொரு நாளையும் ரொம்ப கஷ்டப்பட்டு கடத்துவது… இதெல்லாம் பொழப்பா…?

See also  தேதியான சம்பளம்...! நேரமான சாப்பாடு...! இன்னும் எத்தனை நாளுக்கு?

தேதியான சம்பளம்…! நேரமான சாப்பாடு…! இன்னும் எத்தனை நாளுக்கு…?

அக்கா அல்லது தங்கை கல்யாணத்திற்கு தேவையான பணத்திற்கு மூலதனமாக இருந்த எனக்கு, கடைசில அவர்களுடைய கல்யாணத்திற்கு போக manager இடம் Leave கேட்டா, உன்னுடைய contract முடியும்போதுதான் போக முடியும் என்று சொல்லும்போது… இதெல்லாம் பொழப்பா…?

பிரசவ தேதி தெரிந்தும் மனைவி கூட இருக்க முடியாம… பிறந்த குழந்தையையும் கையில் ஏந்த முடியாம… இதெல்லாம் பொழப்பா…?

See also  தேதியான சம்பளம்...! நேரமான சாப்பாடு...! இன்னும் எத்தனை நாளுக்கு?

இதெல்லாம் பொழப்பா-1

போட்ட dress ஐயே போட்டுக்கிட்டு… புடிக்காத சாப்பாட்டையே சாப்பிட்டுக்கிட்டு… புடிக்காத வேலையையே பாத்துகிட்டு… இதெல்லாம் பொழப்பா…?

இப்படி இதெல்லாம் பொழப்பா…? என்று கேட்டால் “ஆம்” இதுதான் பொழப்பு…! வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருவரின் பொழப்பும் இதுதான்.

இதையெல்லாம் மாற்ற முடியாதா? என்று கேட்டால் மாற்ற முடியும் “நீங்கள் நினைத்தால் மட்டும்”…!

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button