1.8M recalled Cars in Saudi Arabia | Saudization Date Announced by MHRSD

1.8M recalled Cars in Saudi Arabia | Saudization Date Announced by MHRSD
இராச்சியம் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் சுமார் 1.8 மில்லியன் திரும்ப அழைக்கப்பட்ட கார்கள் இயங்குகின்றன என்றும், இது சாலை பயனர்களுக்கு தினசரி அடிப்படையில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் எனவே குறைபாடுள்ள வாகனங்கள் மற்றும் பிற தயாரிப்புகளை திரும்ப பெரும் பிரச்சாரங்களுக்கு பதிலளிக்குமாறு வர்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது, இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்புத் தொழில்களில், Saudization முடிவை அமல்படுத்துவதற்கான தேதியை அறிவித்ததுள்ளது. அதன்படி அக்டோபர் 1முதல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் 11,000 க்கும் மேற்பட்ட வேலைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸிஹத்தி செயலியில் தற்போது தடுப்பூசி மையத்தை தேர்ந்தெடுக்கும்போது, எந்த வகை தடுப்பூசி போடப்படுகிறது என்பதை அறிய முடியும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுக்கத் தவறும் யாத்ரீகர்களின் ஹஜ் அனுமதி ரத்து செய்யப்படும் என்று ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் டாக்டர் அப்துல் ஃபத்தா மஷாத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஹரமைன் அதிவேக ரயில் நிலையத்தின் ஜித்தா சுலைமானியா மத்திய ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய் கிழமை 13-7-2021 முதல் மீண்டும் ரயில்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்
விளம்பரங்களுக்கான டிஜிட்டல் மண்டலங்களை உருவாக்குதல் மற்றும் கட்டிடத் முகப்புகளை விளம்பரத் திரைகளாகப் பயன்படுத்துவது ஆகிய சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ரியாத் நகருக்கான புதுமையான விளம்பரத் திட்டத்திற்கு நகராட்சி மற்றும் ஊரக மற்றும் வீட்டுவசதி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஈத் அல் ஆதா பண்டிகை தினத்தை முன்னிட்டு, துபாயின் கட்டண பொது பார்க்கிங் ஐ, ஜூலை 19 முதல் 22 வரை இலவசமாக பயன்படுத்தலாம் என சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Watch More: Gulf Tech & News