DOCUMENTSSAUDI ARABIA

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தவக்கல்னா நடைமுறைகள் என்ன?

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தவக்கல்னா நடைமுறைகள் என்ன?

பயணிகளின் வீடு மற்றும் நிறுவன தனிமைப்படுத்தலுக்குப் பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் அவர்கள் எப்போது நோய் எதிர்ப்பு சக்தி பெற்றவராக அதாவது Immune status ல் உள்ளவராக எப்போது கருதப்படுவார்கள் என்ற நடைமுறையை குறித்த  சில விளக்கங்களை சவுதி அரேபியாவின்  தவக்கல்னா செயலி வெளியிட்டுள்ளது.

வீடு மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் தவக்கல்னா நடைமுறைகள்

Table of Contents

சவுதி அரேபியாவில் வீட்டு தனிமைப்படுத்தலின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

வீட்டு தனிமைப்படுத்தலில் தேவையான நடைமுறைகள் குறித்த மிக முக்கியமான கேள்விகளுக்கு தவக்கல்னா செயலியானது, அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிலளித்துள்ளது. அவைகள் பின்வருமாறு.

1. வெளிநாட்டிலிருந்து வரும் நபர் வீட்டு தனிமைப்படுத்தலின் போது தவக்கல்னா செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

See also  Hajj Smart Card | New Residency Visa Service | சவூதிஅரேபியா செய்திகள்-30-06-2021

2. செயலியிலிருந்து ஒருபோதும் வெளியேறக்கூடாது, மற்றும் அந்த செயலி எப்போதும் internet உடன் connect செய்யப்பட்டிருக்க வேண்டும்.

3. மேலும் செயலியின் location access ற்கு அனுமதி கொடுத்திருக்கவேண்டும்.

4. தங்களது status முழுவதுமாக green நிலைக்கு மாறாத வரை வீட்டு தனிமைப்படுத்துதலிலிருந்து வெளியேற வேண்டாம்.

வீட்டு தனிமைப்படுத்தல்(Blue Quarantine period) காலத்தை முடித்த பிறகு நீங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

வீட்டு தனிமைப்படுத்தலின் தேவைகளை நிறைவு செய்து, 7 நாட்களை நிறைவு செய்தவுடன், 7 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதால் தவக்கல்னா செயலியானது பயணியின் நிலையை We Trusted zone க்கு மாற்றுகிறது.

See also  How can you keep your Aadhar card information safe?

Trending Now: தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு விடுப்பு | Jawwy Special Mobile Number Offers

நிறுவன தனிமைப்படுத்தல் (Purple Quarantine period) காலம் முடிந்த பிறகு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்:

நிறுவன தனிமைப்படுத்தலின் தேவைகளை நிறைவு செய்து, 7 நாட்களை நிறைவு செய்தவுடன், 7 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரு கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு செய்வதால் தவக்கல்னா செயலியானது பயணியின் நிலையை We Trusted zone க்கு மாற்றுகிறது.

இவ்வாறான இரண்டு முறைகளின் தனிமைப்படுத்தல் காலத்தினை முடித்து அவர்களின் எதிர்மறை கொரோனா சோதனை முடிவின் சுகாதார நிலை பச்சை நிறமாக மாறியதும் அவர்கள் வெளியே சென்று ஒரு சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றலாம்.

See also  Resident Visa Exit/Re-entry visa are extended

வீடு மற்றும் நிறுவன தனிமைப்படுத்தல் தவக்கல்னா நடைமுறைகள்

எப்போது ஒரு நபர் நோயெதிர்ப்பு சக்தி(Immune) பெற்றவராக  கருதப்படுவார்.

தடுப்பூசி போடப்பட்ட நபரின்  உடல்நல நிலையானது அடர் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும்போது அந்த நபர் நோயெதிர்ப்பு சக்தி(Immune) பெற்றவராக  தவக்கல்னா செயலி உறுதி செய்கிறது.

See More: Gulf Tech & News

வெளிநாட்டில் இருந்து வருபவர் 7 வயதுக்கு குறைவானவர்களாக இருந்தால் அவர்களின் நிலையை பற்றிய தவக்கல்னா செயலியின் நடைமுறை என்ன?

பயணத்திலிருந்து வருபவரின் வயது 7 வயதிற்கும் குறைவானதாக இருந்தால், அவர்கள் வந்த 8 மணி நேரத்திற்குள்,  தவக்கல்னாவில் அவர்கள் வசிக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும், மேலும் 7 நாட்களுக்கு அவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு PCR  சோதனை தேவையில்லை.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button