INDIA

TN TRB யின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

[ad_1]

TN TRB யின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி,முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆயிரத்து 30 பணியிடங்கள் அதிகரிப்பட்டு மொத்தம் 3 ஆயிரத்து 237 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்:

தமிழகத்தில், ஆசிரியர் தகுதி வாரியத்தின் அடிப்படையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன்படி ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி, 2022 முதல் 20ஆம் தேதி,2022 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன.

See also  தமிழகத்தில் மின்மீட்டர் குறித்து பொதுமக்களுக்கான அறிவிப்பு - மின்சாரவாரியம் தகவல்!

TNUSRB SI தேர்வு முடிவுகள் வெளியீடு – மதிப்பெண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

அதன் மீதான உத்தேச விடை குறிப்புகள் கடந்த ஏப்ரல் 9, 2022 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட உத்தேச விடை குறிப்பின் மீது வாட்ஸ்அப் மூலம் ஆட்சேபனைகளை ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரியம் பெற்றது. அப்போது 29,141 விண்ணப்பதாரர்கள் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து பகுதி பாடவாரியாக மட்டுமே பாட வல்லுநர்கள் அழைக்கப்பட்டு, விடை குறிப்பினை மறு ஆய்வு செய்யும் பணி மே மாதம் 10ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. மேலும் தேர்வு நடைபெற்ற பாடங்களுக்கு அந்த தேதிகளில் அனுப்பியவர்களின் விவரங்கள் ஆட்சேபனைகள் பாட வாரியாக பெறப்பட்டது.

See also  Bitcoin Shows A Steep Intraday Fall Of 7.8% To US$ 21,371, Ether Down 8.3%: See Why
Exams Daily Mobile App Download

மேலும் இறுதி விடைக்குறிப்புகள் இணையதளத்தில் ஜூலை 4ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் செய்து, முன்பு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் கூடுதலாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கம்ப்யூட்டர் பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய பணியிடங்களில் மேலும் 1030 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படும் எனவும், இதன் மூலம் 3237 பணியிடங்கள் நிரப்பப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

See also  Stocks To Buy: 10 Companies Where You Will Get Decent Dividends In Sept 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்

The post TN TRB யின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு! appeared first on ExamsDaily Tamil.

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button