INDIA

ரேஷன் கார்டு ‘இவர்களுக்கு’ ரத்து செய்யப்படுமா? அரசின் முக்கிய விளக்கம்!

[ad_1]

ரேஷன் கார்டு 'இவர்களுக்கு' ரத்து செய்யப்படுமா? அரசின் முக்கிய விளக்கம்!
ரேஷன் கார்டு ‘இவர்களுக்கு’ ரத்து செய்யப்படுமா? அரசின் முக்கிய விளக்கம்!

ரேஷன் கார்டு ‘இவர்களுக்கு’ ரத்து செய்யப்படுமா? அரசின் முக்கிய விளக்கம்!

தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பலன்கள் கிடைக்காது என்றும், அவர்கள் தங்களது கார்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் தகவல் பரவியது. அதற்கு உத்தரப் பிரதேச மாநில அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013 ன்படி தகுதியில்லாத கார்டுதாரர்களிடம் இருந்து ரேஷன் கார்டைத் திரும்பப் பெற எந்த விதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

முக்கிய உத்தரவு:

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மாநில வாரியாக ரேஷன் திட்டம் மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அனைத்து உதவியும் இதன் மூலம் கிடைக்கிறது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலமாக வசதியில்லாத மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதே நேரம் நல்ல வசதி படைத்தவர்களும் ரேஷன் பலன்களை பெற்று வருகின்றனர்.

See also  Comparing SBI Deposits Interest Rates Vs PNB Vs Union Bank Interest Rates

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில், கடந்த மே மாதத்தில் தகுதியற்ற நபர்கள் தங்களுடைய ரேஷன் கார்டை ஒப்படைக்குமாறு உத்தரப் பிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டதாக பல செய்திகள் பரவின. மேலும், ரேஷன் கார்டை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இச்செய்தி பயனாளிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் ரேஷன் கார்டை ஒப்படைக்க மக்கள் அலைந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது, ரேஷன் கார்டை ஒப்படைக்கவோ அல்லது ரத்து செய்யவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில அரசு தெளிவுபடுத்தியது.

See also  Today's Gold Price Delhi, Aug 25: Check Prices Of Yellow Metal After Gain Of Rs 402

ரேஷன் கார்டு வைத்திருப்பதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று தகவல் பரவியிருந்தது. அதாவது, குடிசை வீடு, மின் இணைப்பு, ஆயுத உரிமம் வைத்திருப்பவர், மோட்டார் சைக்கிள் உரிமையாளர், கோழி/மாடு வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர் போன்றவர்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கத் தகுதியற்றவர் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த செய்திகளை உத்தரப் பிரதேச மாநில உணவுத்துறை ஆணையர் மறுத்துள்ளார். மேலும், இதுபோன்ற போலியான செய்திகளை பரப்பியவர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் ரேஷன் கார்டின் மூலமாக இலவச ரேஷனை பயன்படுத்தி வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

See also  Bitcoin Remains Bearish, Drops To US$ 23,638.70, Down By 0.92%: See Other Crypto Rates

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button