INDIA

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – MP அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

[ad_1]

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - MP அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – MP அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – MP அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கையாள அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 34% ஆக உயர்த்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அரசின் இந்த அறிவிப்பு ஊழியர்களின் மனதில் அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசால் அறிவிக்கப்படும். அதாவது 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 31%ல் இருந்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34%ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். மேலும் கடந்த மாதத்தில் 4 அல்லது 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் பரவியது.

See also  This Multibagger Small Cap Stock Gets Buy Call For Rs 507 Target Price, Gave 515.12% In 5 Years
Exams Daily Mobile App Download

ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் பல நாள் காத்திருப்புக்குப் பிறகு இப்போது அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அதன் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநில அரசின் இந்த முடிவால் சுமார் 7.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள், மேலும் இந்த உயர்வால் கருவூலத்திற்கு ரூ.625 கோடி கூடுதல் செலவாகும்.

See also  ஆகஸ்ட் மாதம் 19 நாட்கள் வங்கி விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!

ஆக.7 வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – வானிலை மையம் எச்சரிக்கை

அரசின் முடிவின்படி, மாநில ஊழியர் டிஏ இப்போது 34% ஆக இருக்கும். இந்த உயர்வு, கருவூலத்தில் சுமையை அதிகப்படுத்தினாலும் , ஊழியர்களுக்கு உதவுவதோடு அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு ஊழியர்கள் முன்பு 31% என்ற விகிதத்தில் அகவிலைப்படியை பெற்று வந்தனர். பின்னர் மாநில அரசு, ஒரே நேரத்தில் 11% வரை அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் அண்டை நாடான சத்தீஸ்கர் ஒரு காலத்தில் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், ஓய்வூதியம் பெறுவோர் DA அதிகரிப்பின் பலனை அதன் கட்டாய ஒப்புதலுடன் மட்டுமே பெறுவார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  சிலிண்டர் மானியம் கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்கள்!

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button