INDIA

தமிழக தனியார் பள்ளிகளில் ஆய்வு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!

[ad_1]

தமிழக தனியார் பள்ளிகளில் ஆய்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!
தமிழக தனியார் பள்ளிகளில் ஆய்வு – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! கள்ளக்குறிச்சி விவகாரம் எதிரொலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் நடைபெற்ற சம்பவம் ஒட்டுமொத்த தனியார் பள்ளிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளில் ஆய்வு:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வந்த தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த விவகாரம் மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் இது உண்மை இல்லை என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கூறுகின்றனர். மேலும் பிரேத பரிசோதனையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் போலீசார் பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் பள்ளி முழுவதும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

See also  SBI Card Ready With Card Tokenization Mandate: MD & CEO Rama Mohan Rao
Exams Daily Mobile App Download

இதில் பள்ளியில் செயல்படும் விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் தேவையான இடங்களில், கண்காணிப்பு கேமரா இல்லாதது போன்ற பல விதிகள் கடைபிடிக்கப்படாதாது தெரியவந்துள்ளது. இதனை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்ய தவறியது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் முழுவதும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதனால் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

See also  This NBFC Is Offering Inflation Beating FD Rates, Up To 8.5% - Read To Know More

தமிழக சமூக நல அலுவலகத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு – மாதம்: ரூ.12,000/- சம்பளம்

இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் உறைவிட பள்ளிகள் செயல்படுகிறது. அங்கு மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

See also  ICICI Securities Bets On This Small Cap Real Estate Company, Suggests buy For Target Price Of Rs 808

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button