INDIA

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

[ad_1]

தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகப்பகுதிகளின் மேல்‌ நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் ஒரு சில இடங்களில் மிதமான மழை மற்றும் கனமழையும், ஒரு சில இடங்களில் சூறாவளி காற்றும் அடிக்கக் கூடும் என்ற தகவலும், இதனால் மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பற்றியும் இந்திய வானிலை ஆய்வு துறை வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்‌:

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூலை 30), நாளை (ஜூலை 31) மற்றும் ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
கனமழை பெய்ய இருக்கும் பகுதிகள் விவரம் :

30.07.2022 : நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

See also  Stock To Buy: This Duopoly Financial Services Sector Stock Likely To Surge 46%

31.07.2022: கள்ளக்குறிச்சி,சேலம்‌, நாமக்கல்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, தர்மபுரி, ஈரோடு, கரூர்‌, தஞ்சாவூர்‌, அரியலூர்‌, கடலூர்‌, திருவாரூர்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திருப்பூர்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01.08.2022: திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கடலூர்‌, அரியலூர்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும், சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, மயிலாடுதுறை, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின் ஓரிரு இடங்களில்‌ கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் தகவல் – நிலுவை தொகை குறித்த அறிவிப்பு!

02.08.2022: திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, வேலூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருப்பத்தூர்‌, தென்காசி, திருநெல்வேலி மற்றும்‌ கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும், சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி,கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளின் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

See also  Indian Silver Prices Sharply Bullish, Up By Rs. 160 Intraday: Check Trend & Rates

03.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி
மற்றும்‌ கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்‌, ராமநாதபுரம்‌, சிவகங்கை, மதுரை, ஈரோடு, நாமக்கல்‌, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌,ராணிப்பேட்டை மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை :

  • சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.
  • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின்‌ ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்‌. அப்போது தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில்‌ இருக்கக்கூடும்‌.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:

30.07.2022: இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

See also  Stocks To Buy: Diagnostic Stock Available At 52-Week Low, Dropped 57% From Highs

31.07.2022: தெற்கு வங்க கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

31.07.2022 முதல்‌ 03.08.2022 வரை: லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள, கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

01.08.2022 முதல்‌ 03.08.2022 வரை: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

02.08.2022: தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.


[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button