INDIA

விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – சேவைகள் ரத்து! பருவமழை எதிரொலி!

[ad_1]

விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - சேவைகள் ரத்து! பருவமழை எதிரொலி!
விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – சேவைகள் ரத்து! பருவமழை எதிரொலி!
விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – சேவைகள் ரத்து! பருவமழை எதிரொலி!

தற்போது டெல்லியில் நிலவிக் கொண்டிருக்கும் மோசமான வானிலை காரணமாக பல்வேறு முக்கியமான பகுதிகளில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

டெல்லியில் பருவமழை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அதாவது, கடந்த பல மாதங்களாக நிலவி வந்த கடுமையான வெப்ப வானிலைக்கு பிறகு, டெல்லியில் தற்போதைய வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி இருக்கிறது. இருப்பினும் இன்று காலை மழை பெய்த கனமழையால் டெல்லியின் முக்கிய சில பகுதிகள் அதாவது கைலாஷ் கிழக்கு, புராரி, ஷாஹ்தாரா, பட்பர்கஞ்ச், ஐடிஓ கிராசிங், இந்தியா கேட், பாரபுல்லா, ரிங் ரோடு, டெல்லி-நொய்டா எல்லை மற்றும் டெல்லி-குர்கான் சாலைகள் ஆகியவை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியது.

See also  Comparing Interest rates on Canara Bank Vs SBI Vs Bank of Baroda
Exams Daily Mobile App Download

அதே நேரத்தில் காலை நேரங்களில் உருவான நெரிசல் போக்குவரத்தை பாதித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக டெல்லி செல்லும் இரண்டு விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர் இந்தியா விமானம் அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்ட நிலையில், இண்டிகோ விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டிருக்கிறது. மறுபக்கத்தில் டெல்லி வந்து சேர வேண்டிய இன்னும் சில விமானங்கள் தாமதமாகி இருக்கிறது. இதனால் பயணிகள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை வந்தடைய போதுமான நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

See also  இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரமடையும் குரங்கு அம்மை - உயர் அதிகாரிகள் ஆலோசனை!

தமிழக வாகன ஓட்டிகளுக்கான அதிர்ச்சி தகவல் – சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு!

இதற்கிடையில் மோசமான வானிலை காரணமாக பயணங்கள் மற்றும் வருகைகள் பாதிக்கப்படலாம் என்று பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன், தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 30) முதல் உத்தரபிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தானின் சில பகுதிகள், டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளிலும் முன்னேறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பருவமழை, முதல் 10 நாட்களில் நல்ல மழையைக் கொடுக்கும் என்றும், இது டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஈடுகட்ட உதவும் என்றும் வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

See also  Rakesh Jhunjhunwala's Akasa Air is well-capitalised, to add one aircraft every two weeks

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button