INDIA

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – முழு விவரங்கள் இதோ!

[ad_1]

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – முழு விவரங்கள் இதோ!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தகுந்த வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகையை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை செலுத்துவது எப்படி என்ற விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

உதவித்தொகை விண்ணப்பம்

தமிழகத்தில் 10 மற்றும் அதற்கு மேல் படித்துள்ள ஒவ்வொரு இளைஞர்களும் வேலைவாய்ப்புக்காக, ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து தகுந்த வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகையை வழங்கி வருகிறது. இப்போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் காத்திருக்கும் இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

See also  Intercept Pharmaceuticals Settles Ocaliva Patent Litigation Case, With Dr Reddy's
Exams Daily Mobile App Download

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு அரசு உதவித் தொகையை வழங்கி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.06.2022 நிலவரப்படி 5 ஆண்டுகளாக வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை செலுத்தலாம். அதன்படி 10ம் வகுப்பில் தோல்வியுற்ற இளைஞர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.600, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.900 வழங்கப்படுகிறது.

See also  Gold Price Delhi August 10: Gold Dips Marginally, Big Decline In Silver

BHEL நிறுவனத்தில் ரூ.72,000/- சம்பளத்தில் வேலை ரெடி – ஜூலை 18 விண்ணப்பிக்க இறுதி நாள்!

அதே போல, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,200 மற்றும் பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,800 உதவித்தொகையாக 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு கீழ் தகுதி பெற்றவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ. 1,800 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2,250 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.3,000 என்ற அடிப்படையில் பத்து வருடங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. இப்போது இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 30.06.2022ம் தேதிப்படி, 45 வயதிற்கு மேல் இல்லாத ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்கும் மற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

See also  What is RBI Sovereign Gold Bond (SGB), Benefits Of SGB: Latest SGB Tranche Opens In August 2022

மேலும், விண்ணப்பதாரர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000க்கு அதிகமாக இருக்க கூடாது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டு வருமானம் தேவையில்லை. குறிப்பாக, பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் முடித்த பட்டதாரிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. இப்போது இந்த நிதியை பெறுவதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம். மேலும் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button