NLC India நிறுவனத்தில் Advisor ஆக பணிபுரிய வாய்ப்பு - தேர்வு கிடையாது || அனுபவசாலிகளுக்கு முன்னுரிமை!

Green Star

NLC India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Advisor பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Green Star

காலிப்பணியிடங்கள்: NLC India நிறுவனத்தில் Advisor பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Green Star

Advisor கல்வி தகுதி: Advisor பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Electrical / Electrical & Electronics போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Green Star

Advisor அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Renewable Energy Power Plant Installation / Commissioning / Operation போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் Senior Position பதவியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Green Star

Advisor வயது வரம்பு: இந்த NLC India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 64 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Green Star

Advisor சம்பளம்: Advisor பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் NLC India நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

Green Star

தேர்வு செய்யும் விதம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Green Star

விண்ணப்பிக்கும் விதம்: Advisor பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.12.2022) தபால் செய்ய வேண்டும்.

Read more stories

Black Star
Black Star