Updated Green List Countries – Abudhabi

Green List Countries
அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை, புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியல் ஜூலை 31, மதியம் 2 மணிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31 ஆம் தேதி நடைமுறைக்குவரும் புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு
அல்பேனியா, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெல்ஜியம், புருனே, பல்கேரியா, கனடா, சீனா, செக் குடியரசு, ஜெர்மனி, ஹாங்காங் (SAR), ஹங்கேரி, இஸ்ரேல், இத்தாலி, மாலத்தீவு, மொரீஷியஸ், மால்டோவா, நியூசிலாந்து, போலந்து, ருமேனியா, சவுதி அரேபியா, செர்பியா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து, தைவான், சீனாவின் மாகாணம், உக்ரைன், அமெரிக்கா.
Kuwait News
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் Direct அல்லது Connecting விமானங்களை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை ரத்து செய்வதாக குவைத்தின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More: Saudi Arabia offers condolences to flood-hit China
Dubai News
எதிஹாட் ஏர்லைன்ஸ் ஐத் தொடர்ந்து இந்தியா – அமீரகம் இடையிலான விமானத்தடையை நீட்டித்தது எமிரேட்ஸ்.
துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில் இருந்து அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கான தடை குறைந்தபட்சம் ஆகஸ்ட் 7 ஆம் தேதிவரையில் தொடரும் என அறிவித்துள்ளது.
Saudi Arabia News
ஜாசானில் 412 டன் இறால் மற்றும் போலி உணவு லேபிள்களை சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் கைப்பற்றியுள்ளது.
கோவிட் -19 நோய்த்தொற்றுலிருந்து குணமடைந்தவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்ததுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள பொது பாஸ்போர்ட் இயக்குநரகம் (ஜவாசாத்) இராச்சியத்தில் வதிவிட மற்றும் பணி விதிமுறைகளை மீறுபவர்களைப்பற்றி புகாரளிக்க இரண்டு எண்களைக் குறிப்பிட்டுள்ளது. அதன்படி மக்கா மற்றும் ரியாத் பகுதிகளுக்கு 911 என்ற எண்ணின் மூலமாகவும், சவுதி அரேபியாவின் மற்ற பகுதிகளுக்கு 999 என்ற எண்ணின் மூலமாகவும்,புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.
Watch More: Gulf Tech & News