Tawakkalna App New Update | சவூதி குடிமக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள்

Tawakkalna App New Update | சவூதி குடிமக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் | சவூதி அரேபியா செய்திகள்-(06-07-2021)
இன்றைய சவுதி அரேபியா செய்திகள் – 06-07-2021
சவூதி அரேபியாவில் உள்ள கூட்டுறவு சுகாதார காப்பீட்டு கவுன்சில் (CCHI) 500 ரியால்களுக்கு குறைவாக செலவாகும் மருத்துவ சிகிச்சைகளுக்கு எந்த முன் அனுமதியும் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தியது. (Prior Approval Not Required for Medical Treatment under Sar500)
சவூதி அரேபியா குடிமக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் அகமது அல்-ராஜிஹி கூறியுள்ளார். அதன்படி சட்ட ஆலோசனை, வழக்கறிஞர் அலுவலகங்கள், சுங்க அனுமதி, ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள், சினிமா துறை, ஓட்டுநர் பள்ளிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் தொழில்கள் ஆகிய துறைகளில் 40,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கபடுவதாக கூறியுள்ளார்.
தெற்கு ஆசிர் பிராந்தியத்தில் திங்களன்று ஏற்பட்ட பயங்கர போக்குவரத்து விபத்தில் இரண்டு பேர் இறந்துள்ளதாகவும் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தாகவும் போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் பணிபுரிந்த மொத்த சவுதி ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 420,000 ஐ தாண்டியுள்ளது என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
டெல்டா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக தடுப்பூசிகள் வேகமாக செயல்படுவதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பயண நடைமுறைகளை எளிதாக்கும் ஒரு பகுதியாக Tawakkalna App ஆனது, இராச்சியத்திற்கு வெளியே கொரோனா வைரஸின் காப்பீட்டு திட்ட முறைகள், மற்றும் சவுதி மத்திய வங்கி மற்றும் கூட்டுறவு சுகாதார காப்பீட்டு கவுன்சில் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டுக் கொள்கை தரவை மதிப்பாய்வு செய்தல் போன்ற அம்சங்களை உள்ளடக்கி, சுகாதார பாஸ்போர்ட் சேவையில் புதிய புதுப்பிப்புகளைச் சேர்த்துள்ளதாக அறிவித்ததுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மூலம் 858 மில்லியன் டாலர் வழங்கி சவுதி அரேபியா, எமனின் உணவு பஞ்சத்தைத் தடுத்துள்ளது என சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: How to Dowload Corona Vaccine Certificate Online
மேலும் பார்க்க: Digital IQAMA Activation Procedure