
மின் ஊர்திகள் (OLA Electric Scooter – Sales, Service & Price) – தமிழில்
Table of Contents
OLA Electric Scooter
Scooter வியாபாரத்தில் புதிதாக நுழைந்த OLA Electric நிறுவனமானது, மற்ற வாகன உற்பத்தியாளார்களை போல் இல்லாமல் தன்னை ஒரு tech mobility start-up நிறுவனமாக கருதுகிறது. ஏற்கனவே உள்ள மற்ற இரு சக்கர வாகன பிராண்டுகளுடன் ஒப்பிடும்போது வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது Ola நிறுவனம்.
Sales & Delivery strategy
Ola ஒரு நேரடி நுகர்வோர் விற்பனை மாதிரியைப் பயன்படுத்துகிறது, எனவே முழு கொள்முதல் செயல்முறையும் உற்பத்தியாளருக்கும் வாங்குபவருக்கும் இடையில் இருக்கும், எனவே இது ஒரு வழக்கமான Dealership Network ஐ அமைப்பதற்கான தேவையை நீக்குகிறது, இந்தியாவில், Mercedes-Benz இந்த விற்பனை மாதிரியை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க உள்ளது, மேலும் Tesla நிறுவனம் உலகளாவிய ரீதியிலும் அதே மாதிரியைப் பின்பற்றுகிறது.
நேரடி கொள்முதல் செயல்முறையை எளிதாக்க OLA ஒரு தனி logistics department ஐ அமைத்துள்ளது. வருங்காலத்தில் வாடிக்கையாளர்கள், தங்களது ஆவணங்கள், கடன் விண்ணப்பங்கள் மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளை ஆன்லைனில் முடிக்கும்படியான சேவையை OLA செயல்படுத்த உள்ளது. இந்த logistics குழுவானது ஸ்கூட்டரை பதிவு செய்து நேரடியாக வாங்குபவரின் வீட்டிற்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
Mercedes-Benz மற்றும் Jaguar Land Rover போன்ற சொகுசு கார் தயாரிப்பாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை வீட்டுக்கு டெலிவரி செய்யும் வசதியை சிறிது காலமாக பின்பற்றி வருகின்றது.
இதே மாதிரியான வசதியை பெரிய அளவில் செயல்படுத்தும் முதல் நிறுவனம் OLA என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணுகுமுறையானது, OLA விற்கு மிகப்பெரிய அளவிலான Dealership மற்றும் Retail Unit போன்ற நிலைகளை அமைப்பதற்க்கான செலவுகளை குறைக்கிறது.
Trending Now: Saudi Football Federation partner with Lenovo – Saudi News Today தமிழ்
Test Drive
Ather Energy ன் Ather Space போன்றே வாங்குபவர்கள் இந்த e-scooter ஐ நேரில் பார்த்து சோதனைச் சவாரிக்கு எடுத்துச் செல்லும் வசதியை கொண்ட ‘experience centres’ ஐ OLA நிறுவனம் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Service & Support strategy
ஒரு முழுமையான sales and service network இல்லாத நிலையில், பலர் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு குறித்து நியாயமாக சில கவலைகளைக் கொண்டிருக்கலாம்.ஆனால் ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு தொலைதூர சேவை (remote service support) ஆதரவை வழங்குவதன் மூலம் அந்த கவலைகள் எளிதில் தீர்க்கப்படும்.
பல வாகனத் தயாரிப்பாளர்கள் பின்பற்றுவதைப் போல் அல்லாமல் OLA நிறுவன பணியாளர்கள், தங்கள் வாடிக்கையாளரை அவர்களின் இல்லத்தில் சந்தித்து தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வாய்ப்புள்ளது. இதுமாதிரியான பல எதிர்பார்ப்புகளுக்கான பதில்களை ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு நெருக்கமாக தேதிகளில் கிடைக்கலாம்.
Watch More: Gulf Tech & News
Price & Specifications
Ola electric scooter ஆனது OLA S1 மற்றும் Ola S1 Pro ஆகிய வகைகளில், பத்து வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Ola electric scooter ஐ, ஒரு standard 5A socket அல்லது அதன் ‘Hyper charger’ charging stations வழியாக சார்ஜ் செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
Top-end Model ஆன OLA Scooter ன் S -series ஆனது சுமார் 150 கிலோமீட்டர் வரம்பு கொண்டதாகவும் இதன் விலை அளவுகள் ரூ.80,000 முதல் ரூ .1 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.