KSA 9 countries Ban – Jawazat | “SAPTCO” update | சவூதிஅரேபியா செய்திகள்

சவூதி பொதுப் போக்குவரத்து நிறுவனமான “SAPTCO” புதன்கிழமை அன்று பொதுப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்து ஒரு அறிவிப்பைப் பெற்றுள்ளதாகவும் அதன்படி, ரியாத் நகரத்திற்கான ராயல் கமிஷன், செப்டம்பர் 01 தேதியை நகரத்தில் பேருந்துகள் மூலம் பொது போக்குவரத்துக்கான கிங் அப்துல் அஜிஸ் திட்டத்தின் தொடக்க தேதியை நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள பொது பாஸ்போர்ட் இயக்குனரகம், இங்கு குறிப்பிட்டுள்ள(அர்ஜென்டினா, பிரேசில், இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், துருக்கி, லெபனான், எகிப்து, இந்தியா) ஒன்பது நாடுகளில் இருந்து நேரடியாக ராஜ்ஜியத்திற்கு உள்நுழைய அனுமதிக்கப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சவுதி அரேபியாவின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இல்லாத ஒரு நாட்டில் சவுதி அரேபியாவிற்கு வெளியே 14 நாட்கள் கழித்த பின்னர் அவர்கள் சவுதி அரேபியாவுக்கு வரலாம் என்பதையும் தெரிவித்துள்ளது.
தேசிய பூங்காக்களில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டினால் 2,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என தேசிய தாவரங்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது
சவுதியிலியிலுந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது மே மாதம் 5.9% உயர்ந்துள்ளதாகவும், அதன்படி 12.5 பில்லியன் சவுதி ரியால்கள் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி மத்திய வங்கி தெரிவித்துள்ளது
சவுதியில் சட்ட விதிமீறல்களின் பேரில் பதியப்பட்ட 274,000 வழக்குகளுக்கு குடியிருப்பாளர்கள் சட்டத்தின் படி தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என ஜவாஸாத் அறிவித்துள்ளது
இந்த ஆண்டு ஹஜ் செய்யவரும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்ய 10,000 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை ஆளுனர் நியமித்துள்ளார் என மக்கா மற்றும் மதீனா மசூதிகளின் விவகாரங்களின் பொதுத் தலைவர் டாக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டலம் மற்றும் மன்னர் சவுத் மெடிக்கல் சிட்டி இனணந்து நடத்தும் இரத்ததான முகாம் வருகிற 2-7-2021 வெள்ளிக்கிழமை காலை 8-30 மணிமுதல் மாலை 4-30 மணிவரை கிங் சவுத் மெடிக்கல் சிட்டியில் வைத்து நடைபெறும் என தெரிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 இன் டெல்டா மாறுபாடு காரணமாக இன்று அதாவது வியாழக்கிழமை தங்கத்தின் விலை உயர்ந்ததுள்ளதாகவும், அதன்படி 24k தங்கமானது, ஒரு கிராமுக்கு Dh215 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது என்று துபாய் பத்திரிக்கை இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Trending Now:
Engineers மற்றும் Technicians membership ஐ Saudi Council of Engineers Portal ல் Renewal செய்வது மற்றும் Temporary SCE membership ஐ permanent membership ஆக மாற்றும் செயல்முறை தொகுப்பை வீடியோவின் Description Box ல் கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்து தெரிந்துகொள்ளலாம்.