INDIA

Launch of new e-filing Portal – Income Tax Department | புதிய இ-ஃபைலிங் போர்ட்டல்

Launch of new e-filing Portal - Income Tax Department
New e-filing Portal

வருமான வரித்துறை www.incometax.gov.in  என்ற தனது புதிய இ-ஃபைலிங் போர்ட்டலை வருகின்ற, ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இந்த  புதிய மின்-தாக்கல் போர்டல் ஆனது  (www.incometax.gov.in)  வரி செலுத்துவோரின் வசதியையும்,  வரி செலுத்துவோருக்கு நவீன, தடையற்ற அனுபவத்தை வழங்குவதையும்,  நோக்கமாகக் கொண்டுள்ளதாக  வருமான வரி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வரி செலுத்துவோருக்கான இணையதளமானது, வரி செலுத்துவோருக்கான, ITR கணக்கை விரைவாக செயல்படுத்துதல், விரைவாக refunds பெறுதல் போன்ற வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கும் எனவும்,

வரி செலுத்துவோரின் வசதிக்காக, அனைத்து உரையாடல் தொடர்புகள்,  மற்றும் பதிவேற்றங்கள் அல்லது நிலுவையில் உள்ள செயல்கள் யாவும், ஒற்றை டாஷ்போர்டில் காண்பிக்கப்படும் எனறும்,

வரி செலுத்துவோர், எந்த வரி அறிவும் இல்லாமல் ITR ஆவணத்தை பூர்த்தி செய்ய உதவும் வகையில், உரையாடும் கேள்விகளுடன் கூடிய ITR தயாரிப்பு மென்பொருளானது, இலவசமாக ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது எனறும், கூறியுள்ளார்.

வரி செலுத்துவோர் உதவிக்கான புதிய அழைப்பு மையம், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், பயிற்சிகள், வீடியோக்கள் மற்றும் சாட்போட் / நேரடி முகவருடன் வரி செலுத்துவோர் கேள்விகளுக்கு உடனடி பதில் போன்ற வசதிகள் கொண்டதாக இந்த புதிய இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனறும்,

See also  தமிழகத்தில் மின்மீட்டர் குறித்து பொதுமக்களுக்கான அறிவிப்பு - மின்சாரவாரியம் தகவல்!

இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து முக்கிய போர்டல் செயல்பாடுகளும், மொபைல் பயன்பாட்டில் கிடைக்கும்படியும்,  இதை மொபைல் நெட்வொர்க்கில் எப்போது வேண்டுமானாலும் முழுமையாக அணுகும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரி ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

 <img src="NEW-E-FILING-PORTAL.jpg" alt="NEW E-FILING PORTAL"/>
New e-filing Portal

 

எளிதாக, வரி செலுத்துவதற்கு வசதியாக, netbanking, UPI, Credit Card மற்றும் RTGS/NEFT போன்ற புதிய ஆன்லைன் வரி செலுத்தும் முறை படிப்படியாக இந்த புதிய போர்ட்டலில் செயல்படுத்தப்படும் எனறும்,

 இந்த புதிய இணையதளத்தை நிறுவும் காரணங்களுக்காவும், பழைய இணையதளத்திலிருந்து (incometaxindiaefiling.gov.in) புதிய இணையதளத்திற்கு தரவுகளை இடம்பெயர்வு செய்யும் நடவடிக்கைக்காகவும், தற்போது உள்ள incometaxindiaefiling.gov.in என்ற இணையதள சேவையானது,  வரி செலுத்துவோர் மற்றும் பிற வெளிப்புற பங்குதாரர்களின் பயன்பாட்டிற்க்கு ஜூன் 1, 2021 முதல் ஜூன் 6, 2021, வரை கிடைக்காது என்று மத்திய நேரடி வரி வாரியம் மற்றும் வருவாய் துறை நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

See also  விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு - சேவைகள் ரத்து! பருவமழை எதிரொலி!

மேலும், வரி செலுத்துவோருக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாமல் இருக்க, இந்த காலகட்டத்தில் எந்தவொரு உடன்பாடு தேதியையும் துறை நிர்ணயிக்காது என்றும், வழக்குகள் அல்லது  உடன்பாடுகளை சரிசெய்ய  ஜூன், 10 2021 க்குபிறகே, வரி செலுத்துவோருக்கு புதிய அமைப்பில் பதிலளிக்க அவகாசம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,

 ஆன்லைனில் சமர்ப்பிப்புகள் தேவைப்படும் எந்தவொரு விசாரணை அல்லது உடன்பாடுகள் யாவும், இந்த காலகட்டத்தில் திட்டமிடப்பட்டிருந்தால், அது முன்கூட்டியோ அல்லது ஒத்திவைக்கவோ படும் என்றும் இந்த காலகட்டத்திற்குப் பிறகு பணி உருப்படிகள் மாற்றியமைக்கப்படும் என்று மத்திய நேரடி வரி வாரியம் மற்றும் வருவாய் துறை நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

 

Launch of new e-filing Portal - Income Tax Department
Income Tax Department

 

மேலும், சேவைகள் கிடைக்காதது குறித்து, MCA, GSTN, DPIIT, CBIC, GeM, DGFT போன்ற PAN சரிபார்ப்பு சேவைகளைப் பெறும் வங்கிகள், உள்ளிட்ட வெளி நிறுவனங்களுக்கு, துறை அறிவித்துள்ளதாகவும், மேலும் தங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு, இந்த அறிவிப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும்‌, இதனால் தொடர்புடைய நடவடிக்கைகளை இந்த இருட்டடிப்பு காலத்திற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ முடிக்க முடியும் என்று மத்திய நேரடி வரி வாரியம் மற்றும் வருவாய் துறை நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

See also  பள்ளி & கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை - ஆரஞ்சு அலெர்ட் எதிரொலி! அரசு உத்தரவு!

இதன்  தொடர்ச்சியாக, சேவைகள் கிடைக்கபடாத  இந்த நாட்களில், சிரமத்தை தவிர்க்கும் வகையில், வரி செலுத்துபவர்கள்  ஏதேனும்  சமர்ப்பிப்புகள், பதிவேற்றங்கள் அல்லது பதிவிறக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அவசர பணிகளையும்,  ஜூன் 1 2021 ஆம் தேதிக்கு முன்னரே முடித்துக்கொள்ளுமாறு, வருமான வரி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த புதிய இணையதளத்தின் இயல்பு நிலையை அடையும்வரை, அனைத்து வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்களை பொறுமையுடன் இருக்குமாறு துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள…

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button