How to Register in Saudi Council of Engineers Tamil | தமிழ்
How to Register in Saudi Council of Engineers in Tamil | தமிழ் | Engineers membership ஐ Renewal செய்வது எப்படி?
ஒவ்வொரு வெளிநாட்டு engineer களும் மற்றும் Technician களும் இகாமா புதுப்பித்தலுக்காக சவுதி பொறியாளர்கள் கவுன்சில் (SCE) Membership ஐ புதுப்பிக்க வேண்டும்.
Saudi Council of Engineers ல் எவ்வாறு பதிவு செய்வது?
Table of Contents
Membership ஐ renewal செய்யும் முறை
முதலில், Saudi Council of Engineers வலைத்தளத்தைத் திறந்து உங்கள் SCE Account உள்நுழைய வேண்டும். ஒருவேளை Saudi Council of Engineers Account – க்கான Password ஐ நீங்கள் மறந்துவிட்டால், ”retrieve login information” Option ஐ கிளிக் செய்யலாம்.
இப்போது உங்கள் சவுதி கவுன்சில் ஆஃப் இன்ஜினியர்ஸ் கணக்கில் உள்நுழைந்து, “Renew Membership” Option ஐ காணும் வரை கீழே செல்லவும்.
“Renew Membership” button ஐ கிளிக் செய்தவுடன் ஒரு புதிய பக்கம் திறக்கும். அதில் “Add New Request” Option ஐ கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்த பக்கத்தில், நீங்கள் 3 விவரங்களை உள்ளிட வேண்டும்;
- நீங்கள் SCE உறுப்பிரை புதுப்பிக்க விரும்பும் காலம்.
- இகாமா எண்.
- இகாமா காலாவதி தேதி.
Saudi Council of Engineers உறுப்பிரை புதுப்பிப்பதற்கான கட்டணம்;
- பொறியாளர்களுக்கு (Engineers): SR 250/year.
- தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு (Technicians): SR 200/year.
இந்த தகவலைச் Submit செய்த பிறகு, membership புதுப்பித்தலுக்கான உங்கள் கோரிக்கை எண்ணைக் கொண்ட புதிய பக்கத்தை SCE வலைத்தளம் திறக்கும்.
சில மணி நேரம் காத்திருந்து மீண்டும் உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். அதில் உங்களுக்கான messages section சென்று பார்த்தால், அங்கு membership renewal க்கு உண்டான கட்டணத்தை செலுத்தவதற்கு, ஒரு குறிப்பிட்ட SADAD number கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த SADAD number க்கு உங்களுடைய கட்டணத்தை online வழியாக payment செய்ய முடியும்.
பணம் செலுத்திய சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் உங்கள் SCE Account – க்கு சென்று பார்த்தால், சவுதி பொறியாளர்கள் கவுன்சிலில், Membership Renewal க்கான உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியைக் காணலாம்.
Trending Now : How to Renew the Saudi Drivers License Online
Temporary membership ஐ SCE இல் Renewal செய்யும் முறை
நீங்கள் ஆரம்பத்தில் சவுதி பொறியாளர்கள் கவுன்சிலுடன் Temporary Membership ஐ பெற்றிருந்தால், Renewal செய்வது இரண்டு முறைகளில் மட்டுமே சாத்தியமாகும்.
- Iqama profession ஐ மாற்ற வேண்டும்.
- உங்களுடைய professional degree certificate ஐ வழங்க வேண்டும்.
Temporary SCE membership ஐ permanent membership ஆக மாற்றும் முறை
உங்களுடைய தொழிலுடன் தொடர்புடைய professional degree certificate இருந்தால், சவுதி இன்ஜினியர்ஸ் கவுன்சிலில் உங்களுடைய தற்காலிக உறுப்பினரை கீழ்காணும் வழியைப் பின்பற்றி சாதாரணமாக மாற்றலாம்
உங்கள் SCE Account ல் உள்நுழைந்து “convert temporary membership to permanent” option ஐ கிளிக் செய்யவும்.
“Add New Request” என்ற option ஐ கிளிக் செய்யவும்.
தற்காலிக SCE உறுப்பினரை, நிரந்தரமாக மாற்ற தேவையான professional degree certificate ஐ பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்து submit செய்தவுடன், உங்கள் கோரிக்கையின் நிலை “completed” என மாறிவிடும். அவ்வாறு மாறியதும், சவுதி பொறியாளர்கள் கவுன்சில் உங்கள் தற்காலிக உறுப்பினர்களை சாதாரண உறுப்பினராக (Permanent Membership) மாற்றியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.
முக்கியமான குறிப்பு
Temporary Membership ஐ Normal Membership ஆக மாற்றுவதற்கான உங்கள் கோரிக்கை சில நாட்களுக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நீங்கள் ஒரு SCE Appointment ஐ முன்பதிவு செய்து பார்வையிடலாம்.
மேலே விளக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றி இப்போது நீங்கள் Renewal Process ஐ தொடரலாம்.உறுப்பினர் புதுப்பித்தலுக்கு பணம் செலுத்த SCE ஒரு SADAD எண்ணை வழங்கும். உங்கள் Membership சிறிது நேரத்திற்குப் பிறகு புதுப்பிக்கப்படும்.
SCE membership ஆனது Live ல் இருக்கும்போதே இகாமாவை Renewal செய்வது சிறந்தது. அதன்படி உங்களுடைய இகாமாவின் (Iqama) காலாவதி தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே Iqama வை Renewal செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.