Hajj Smart Card | New Residency Visa Service | சவூதிஅரேபியா செய்திகள்-30-06-2021

Hajj Smart Card | New Residency Visa Service | சவூதிஅரேபியா செய்திகள்(30-06-2021)
இன்றைய சவுதி அரேபியா செய்திகள் – 30-06-2021
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் எந்த நேரத்திலும் எவ்வித தடங்கலுமின்றி தங்களது ரெசிடென்சி தொடர்பான சேவையை பெற பிரத்தியேக சேவை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது ஜூலை 7 முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று ரெசிடென்ஸ் மற்றும் வெளியுறவுத்துறைகளுக்கான பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது
வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் பயணிகளுக்கு இலங்கை அரசானது தற்காலிக தடை அறிவித்துள்ளது இந்த தடையானது ஜூலை 1 முதல் ஜூலை 13-ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் தற்போது வரை துவங்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச விமான சேவைக்கான தடையினை மேலும் ஒரு மாதம் நீடிப்பதாக இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது
40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா இரண்டாவது தடுப்பூசி இரண்டு வாரங்களில் செலுத்தப்படும் என சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது
வரும் ஜூலை 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் Eid al Alha வின் முதல் நாளாக இருக்கக் கூடும் என்று சர்வதேச வானியல் மையம் அறிவித்துள்ளது
Trending Now: How to Register in saudi council of Engineers
ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிபொருள் விலை குழு அமைச்சகம் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை பட்டியலை அறிவித்திருந்தது அதன்படி ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதத்திற்கான விலையானது சற்று அதிகரித்திருப்பதாகவும் இந்த குழு தெரிவித்துள்ளது
கொரோனாவிற்கான தடுப்பூசியினை தற்போது கர்ப்பிணி பெண்களுக்கும் போட தொடங்கியுள்ளதாக துபாய் சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது அதன்படி துபாய் முழுவதும் உள்ள அனைத்து DHA தடுப்பூசி மையங்களும் நேற்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசியினை வழங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்கள், Teller சேவைகள் மற்றும் பணபரிவர்தனைகளுக்கு Hajj Smart Card-களைப் பயன்படுத்தலாம் என ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது
சமூக காப்பீட்டு சட்டத்தின் நிறைவேற்று விதிமுறைகளின் கீழ் சவுதி குடிமக்கள் அல்லாத 3 வகையினருக்கு ஓய்வு ஊதியம் வழங்க மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
சவுதி அரேபியாவின் அல் ஜுஃப் மாகாணத்தில் 12-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது
Watch below for how to
Driver’s License Renewal through Absher Online