SAUDI ARABIAUAE

Flights ban from 4 Countries | புதிய வகை Corona எதிரொலி | Saudi Arabia News

புதிய வகை Corona எதிரொலி-Flights ban from 4 Countries-சவூதி அரேபியா அவசர செய்திகள்-(03-07-2021)

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையின் தடையை,  மறு அறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிப்பு செய்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும்,  அவர்களின் மூலமாக வேறு எவரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்கவும் புதிய COVID-19 contact tracing system என்னும் புதிய விசாரணை மற்றும் தொடர்பு தடம் அறிதல் முறையை அமீரகத்திலேயே முதன்முறையாக அபுதாபி சுகாதார அதிகாரிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கொரோனா சுகாதார நிலையை சீர்குலைக்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சவுதி நாட்டினர் மற்றும் வெளிநாட்டவர்கள் 12 பேரை சவுதி ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

சவூதி அரேபிய குடிமக்கள், முன் அனுமதியின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய சவூதி அரேபியா தடை விதித்துள்ளது என்று உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி, சவுதி பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

See also  Saudi Arabia's economy is expected to double in size by 2022, thanks to oil and a "viable" non-oil industry.

இதுவரை சவுதி அரேபியாவில் 587 க்கும் மேற்பட்ட தடுப்பூசி மையங்கள் மூலம் 18 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ‘நூர் ரியாத்’ ஒளித்திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்தப்பட்ட இரண்டு கலைப்படைப்புகள் ‘பெக்கான்’ மற்றும் ‘ஸ்டார் இன் மோஷன்’ ஆகியவை உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கொரோனா விதிமீறலில் ஈடுப்பட்ட 28 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்தனர் இதில் 5 நபர்கள் ஹாயில் பகுதியிலும் 23 நபர்கள் தபூகிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Trending Now: How to Register in Saudi Council of Engineers

See also  பயணத் தடையை நீக்க இந்தியா முயற்சி மற்றும் அமீரக விமானத்தடை

புதிய வகை கொரோனா பரவல் –  அமீரகத்திற்கு பயணத் தடை விதித்தது சவூதி அரேபியா, கொரோனா வைரஸின்  மாறுபட்ட புதிய வகைகளின் பரவலானது அதிகரித்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகம், வியட்னாம், எதியோபியா மற்றும் ஆப்கானிஸ்தான்  ஆகிய நாடுகளுக்கு முன் அனுமதியின்றி செல்லவும் அங்கிருந்து வருவதற்கும் உண்டான பயணத்தை  தடை செய்வதாக சவுதி உள்துறை அமைச்சகம் தற்போது அறிவித்துள்ளது.

Flights ban from 4 Countries

இந்த நான்கு நாடுகளுக்கான விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு நிறுத்தப்படும் எனவும், இந்த தேதிக்கு பிறகு சவுதி குடிமக்கள் உட்பட அனைத்து பயணிகளும் வரும்போது கட்டாய நிறுவன தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும்  அரபு செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சவுதிக்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று வெளியேறிய பயணிகளுக்கு அல்லது சவுதி அரேபிய பயணத் தடையை விதித்த வேறு எந்த நாட்டிற்கும் பயணித்து வெளியேறிய பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

See also  Mohamed Yousuf Motors offers - BMW M3 & M4

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 99 சதவிகிதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Flights ban from 4 Countries | புதிய வகை Corona எதிரொலி
Flights ban from 4 Countries | புதிய வகை Corona எதிரொலி

ரியாத் நகரில் “கிங் அப்துல் அஜீஸ் பொது பேருந்து போக்குவரத்து” வருகிற செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ரியாத் நகர ராயல் கமிஷன் அறிவித்துள்ளது.

Amazon ன் Small Business Days Sales ல் 50 சதவிகித தள்ளுபடி விலையில் Electronics மற்றும் Accessories வாங்க விருப்பம் உள்ளவர்கள் வீடியோவின் Description Box ல் கொடுக்கப்பட்டுள்ள Link ஐ கிளிக் செய்து பார்வையிடலாம்.

இந்த Sale ஆனது 4 ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் முடிவடைகிறது.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button