Family & Visit Visa ஜூலை 12 முதல் தொடக்கம்- Qatar

Family & Visit Visa ஜூலை 12 முதல் தொடக்கம்- Qatar | வெளிநாடு செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு
இன்றைய சவுதி அரேபியா செய்திகள் – 10-07-2021
கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக்கொள்வதால், உடலுக்கு அதிக மற்றும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கிடைப்பதாகவும், மேலும் தொற்றுநோய்களின் மாற்றங்களிலிருந்து பாதுகாக்கிறது என்றும் சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது சவூதி அரேபியா. சவூதி பத்திரிகை நிறுவனம் வெள்ளிக்கிழமை நடத்திய அறிக்கையில், சவூதி உணவு மற்றும் மருந்து ஆணையத்திடம் (எஸ்.எஃப்.டி.ஏ) அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் இராச்சியத்தில் ஒப்புதல் மற்றும் பதிவுக்கான கோரிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து இந்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இந்தியா to சவூதி அரேபியா(கத்தார் வழியாக)
சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், அரபாத்தின் நாளாக ஜூலை 19 ஐயும், மற்றும் ஈத் அல்-ஆதாவின் முதல் நாளாக ஜூலை 20 ஐயும் அறிவித்துள்ளது
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமென சிறுபான்மை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற 60,000 உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் பதிவை முடித்ததாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்தது.
சவுதி கிழக்கு பிராந்தியத்தில் 238 பேரும் அல் பாஹாவில் 11 உட்பட 249 பேர் கொரோனா விதிமீறலில் ஈடுபட்டதாக சவுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
சவுதி விஷன் 2030 இன் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றான வீட்டுத்திட்டம், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிட முன்னதாகவே அதன் இலக்கை அடைவதற்கான பாதையில் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: Gulf Tech & News
சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் விலை 2% உயர்ந்து ஒரு பீபாய் கச்சாய் எண்ணெய் 75.60 அமெரிக்கா டாலருக்கு விற்ப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் நாடானது, கொரோனா பரவல் காரணமாக இடைநிறுத்தம் செய்திருந்த குடும்ப மற்றும் சுற்றுலா விசாக்களை, ஜூலை 12 முதல் மீண்டும் வழங்க தொடங்கும் என்று கத்தாரின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த முடிவு அங்கீகரிக்கப்பட்ட பயண கொள்கைகளின் கட்டமைப்பிற்குள் இருப்பதாகவும் அதற்கான முன்னேற்றங்கள் தொடர்பாக பொது சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.