SAUDI ARABIA

30 க்கும் மேற்பட்ட தொழில்கள் சவுதிமயமாக்கம் | தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம்-புதுப்பித்த பயண நடைமுறை

தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம்-புதுப்பித்த பயண நடைமுறை – 30 க்கும் மேற்பட்ட தொழில்கள் சவுதிமயமாக்கம் -சவூதி அரேபியா செய்திகள்-(05-07-2021)

புதுப்பித்த பயண நடைமுறை

வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம். பயண நடைமுறையை புதுப்பித்த அபுதாபி.

புதுப்பிக்கப்பட்ட பயண நடைமுறையின்படி பசுமை நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்,  விமான நிலையம் வந்தடைந்த உடன் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஆனால் பசுமை நாடுகள் இல்லாமல் வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இருப்பின் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் ஒரு PCR  சோதனை எடுக்க வேண்டும் எனவும் பின்னர் அவர்கள் 12 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

See also  Only employees who have received complete vaccination are entitled to automatic sick leave, according to the Ministry of Health.

இந்த ஆண்டு, நாட்டில் 30 க்கும் மேற்பட்ட தொழில்கள் சவுதிமயமாக்கப்படும் என்று சவுதி மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.

தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை திறம்பட செய்ய தேவையான திறன்களை சரி பார்க்கும் பொருட்டு சவுதி அரேபியாவில் உள்ள மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை 1ஆம் தேதி முதல் தொழில் சரிபார்ப்பு திட்டத்தின் முதல் கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

See also  Tawakkalna App New Update | சவூதி குடிமக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள்

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனைத்து நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்திலும் பங்கேற்கும் முடிவை அரசு விரைவில் செயல்படுத்த உள்ளதாக சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் தலால் தெரிவித்துள்ளார்.

ஹஜ் அனுமதி இல்லாமல் மினா, முஸ்தலிஃபா மற்றும் அரபு புனித தலங்களுக்குள் நுழைபவர்களுக்கு 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சுகாதார பாஸ்போர்ட்டில் புதிய அம்சங்களை உள்ளடக்கிய புதிய பதிவேற்றத்தை சவூதி தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்துடன் இணைந்து தவக்கல்னா அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20213 கொரோனா விதிமீறல்கள்  பதிவாகியுள்ளது என உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

See also  Saudi Arabia Visit Visa Extension & Thermal Camera Removed at Makkah

ஜுலை 4 முதல் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தவக்கல்னா மற்றும் ஸிஹத்தி செயலியின் மூலம் இரண்டாம் தடுப்பூசிக்கான முன்பதிவை பெறமுடியும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Watch More on Youtube:

தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம்-புதுப்பித்த பயண நடைமுறை – 30 க்கும் மேற்பட்ட தொழில்கள் சவுதிமயமாக்கம் -சவூதி அரேபியா செய்திகள்-(05-07-2021)

Read More Artices:

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையின் தடையை,  மறு அறிவிப்பு வரும் வரையிலும் நீட்டிப்பு செய்வதாக எமிரேட்ஸ் ஏர்லைன்

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button