பயணத் தடையை நீக்க இந்தியா முயற்சி மற்றும் அமீரக விமானத்தடை

பயணத் தடையை நீக்க இந்தியா முயற்சி மற்றும் அமீரக விமானத்தடை
ஹஜ்ஜின் விதிமுறைகளையும் அறிவுறுத்தல்களையும் மீறியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹஜ் பாதுகாப்புப் படை கட்டளையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அனுமதியில்லாத ஹஜ் யாத்ரீகளுக்கு போக்குவரத்து உதவி செய்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் 50000 ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அறிவித்துள்ளது
சினோஃபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை இரண்டு டோஸ் பூர்த்தி செய்தவர்கள் இப்போது கிங் ஃபஹத் காஸ்வே மூலம் சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்றும், அவ்வாறு வருபவர்கள் அவர்களுடைய 24 மணி நேரத்திற்குள் எடுத்த எதிர்மறை PCR சோதனையை முன்வைக்க வேண்டும் என்றும் கிங் ஃபஹத் காஸ்வே ஜெனரல் கார்ப்பரேஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டடுள்ளது.
சவுதியில் தற்போது அனைத்த வயதினருக்கும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸிர்கான முன்பதிவு ஸிஹதி மற்றும் தவக்கல்னா செயலிகளில் கிடைக்கிறது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
கடந்த ஒருவாரத்தில் 20197 கொரோனா விதிமீறல்கள் பதிவாகியுள்ளது என சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
சவுதியிலிருந்து பயணம் மேற்கொள்ளக்கூடியவர்களுக்கு டிக்கட்முன்பதிவு,செல்லுபடியாகும் விசா, சரியான பயண ஆவணங்கள்,பயணம் செல்லும் நாட்டின் நுழையும் நிபந்தனைகள் ஆகிய 4 நிபந்தனைகளை விதித்துள்ளது ஜவாஸாத்
Read More: Huroob என்றால் என்ன?
இகாமாவில் Huroob Status ஐ எவ்வாறு தெரிந்துகொள்வது?
சவுதி அரேபியாவின் அரசு துறைகளுக்கான ஈத் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன வரும் 14-7-2021 மாலை முதல் விடுமுறை ஆரம்பமாகும் என்றும் 25-7-2021 அன்று காலை முதல் பணிகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமானங்களின் இடைநீக்கம் குறைந்தபட்சம் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனம் எமிரேட்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சாப்ட்வேர் கோடிங்கில்(Software Coding) சிறந்து விளங்கும் திறமையான ஒரு லட்சம் நபர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 10 ஆண்டு கோல்டன் விசாக்களை வழங்க உள்ளதாக டிஜிட்டல் பொருளாதாரத்தின் மாநில அமைச்சர் சுல்தான் தெரிவித்துள்ளார்
வளைகுடா நாடுகள் உடனான பயணத் தடையை நீக்க இந்தியா முயற்சி,
வளைகுடா மற்றும் பிற அரபு நாடுகளுக்கான இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி முரளிதரன் வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன், இந்தியாவுடனான விமான பயண தடையை நீக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
Watch More: Gulf Tech & News