தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed – kuwait

தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed – kuwait
தொழிலாளர் சம்பளத்தை மாற்றுதல்
சவூதி அரேபியாவில் உள்ள மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், (HRSD) தொழிலாளர் சம்பளத்தை மாற்றுதல் அல்லது மாற்றியமைத்தல் (Changing or Modifying) போன்ற விஷயங்கள் தொழிலாளியின் எழுத்துப்பூர்வ மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒப்புதலுடன் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தியது.
ஒரு பயனாளி தனது சம்பளத்தை இராச்சியத்தில் உள்ள ஒரு நிறுவனத்தால் குறைத்ததாக புகார் அளித்ததை அடுத்து, விளக்கமளித்த அமைச்சகம், “ஒரு ஒழுங்கற்ற காரணத்திற்காக தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல் எனவும். எனவே தொழிலாளி தங்கள் சம்பளம் தொடர்பான அறிக்கையை Ma ‘an கண்காணிப்பு பயன்பாடு மூலம் தாக்கல் செய்யலாம் என்றும் கூறியுள்ளது.
வியாழக்கிழமை முதல் இராச்சியத்தில் மிகவும் வெப்பமான வானிலை நிலவும் எனவும் அதன்படி வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2017 முதல் 2020 இறுதிவரை 400,000 காஃபி மரங்களை நடவு செய்து சவுதி அரேபியா ஒரு புதிய இலக்கை எட்டியுள்ளது என சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Tawakkalna app new update
சவுதி அரேபியாவிற்குள் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து வருவதால், ராஸில் பகுதியில் 495,481 போதை மாத்திரைகளை கடத்த மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக எல்லைக் பாதுகாப்பு காவல்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவையும் ஓமானையும் இணைக்கும் முதல் சாலையின் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சாலை விரைவில் திறக்கப்படும் என்றும் இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து நேரம் குறையும் எனவும் ஓமானின் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த வருட ஹஜ் யாத்ரீகர்களைப் வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருப்பதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணத் தடை நீக்கப்பட்டாலும் செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருப்பவர்களுக்கே நாட்டிற்குள் நுழைய அனுமதி குவைத் அரசு தகவல். செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்திருந்து தடுப்பூசியின் இரண்டு டோஸை போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே குவைத் வர அனுமதி வழங்கப்படும் என்றும், வருகை விசா மற்றும் காலாவதியான ரெசிடென்சி விசா உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் எதிரொலியாக ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு முழுநேர lockdown ஐ அமல்படுத்த விருக்கும் ஓமான்.
ஓமானில் வரவிருக்கக்கூடிய ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு கொரோனாவிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பார்க்க: Digital Iqama Activation Procedure.