துபாய் விமான நிலையத்தில் விரைவில் PCR பரிசோதனை மையம்

துபாய் விமான நிலையத்தில் விரைவில் PCR பரிசோதனை மையம் நிறுவப்படும்
துபாய் விமான நிலையத்தில் விரைவில் PCR பரிசோதனை மையம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் விமான நிலையங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், விரைவில் துபாய் விமான நிலையத்தில், PCR பரிசோதனை மையம் நிறுவப்படும் எனவும், பரிசோதனையின் முடிவுகள் 3 முதல் 4 மணி நேரத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
விமான நிலையத்தின் இரண்டாம் டெர்மினலில் இந்த ஆய்வகம் அமைய இருப்பதாகவும் பயணிகளின் மருத்துவ பாதுகாப்பிற்கு, துபாய் விமான நிலையம் முக்கியத்துவம் அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகம் முழுவதிலும் BIOMATRIC VACCINE PASSPORT இருந்தால், அது PCR பரிசோதனைக்கு மாற்றாக அமையும் எனவும், நம்மிடம் இது குறித்து அப்ளிகேஷன்கள் உள்ளதாகவும், உலக நாடுகள் இதனை பின்பற்றினால் பயணியின் தடுப்பூசி நிலவரத்தை நம்மால் எளிதில் கண்காணிக்க முடியும் எனவும், இதன் மூலம் IATA மூலமாக நாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் DIGITAL VACCINE PASSPORT விஷயத்தைப் பொருத்தவரையில் விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள், பயணிகளின் தனி உரிமைகளில் தலையிடக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமீரகத்தை விட்டு வெளியேராமல், VISIT VISA STATUS ஐ தற்போது
மாற்றிக் கொள்ளலாம்.
கொரொனாவானது பரவி வரும் சூழ்நிலையில், விமானங்கள் அனைத்து நாடுகளிலும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது, இந்நிலையில் VISIT VISA அல்லது டூரிஸ்ட் விசா மூலம் அமீரகம் வந்திருப்பவர்கள், உங்களுடைய விசாக்கள் காலாவதியான நிலையில் இருந்து, அமீரகத்தை விட்டு, வெளியேற முடியாமல் இருந்தால், அவர்கள் தற்போது அமீரகத்தை விட்டு வெளியேராமல் VISIT VISA STATUS ஐ மாற்றிக்கொள்ளலாம் என கூறப்படுகிறது.
அதன்படி டூரிஸ்ட் விசா வைத்திருப்போர் உங்களுக்கு விசா வழங்கிய டிராவல் ஏஜென்சி மூலமாக புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், ஆனால் உங்களுடைய புதிய விண்ணப்பம் பழைய விசாவின் காலவதி தேதிக்கு 3 முதல்4 நாட்களுக்குள் சமர்ப்பிக்க பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரொனா காரணமாக, தேவையான ஆவணங்களை ONLINE மூலமாக அனுப்ப, ஏஜென்ஸிகள் அனுமதிக்கின்றன எனவும், கட்டணம் யாவும் இணைய பரிமாற்றம் என்பதால், முலுசெயல்முறைகளும் சுலபம்தான் எனவும் குறிப்பிடபட்டுள்ளது. மேலும்
30 அல்லது 90 நாட்களுக்குள்ளான விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்க்கான கட்டணமானது, நீட்டிப்பு நாட்களையும், விண்ணப்பிக்கும் எமிரேட் ஐ பொறுத்தது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கக்கூடியவர்கள், தங்களது PASSPORT நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், டூரிஸ்ட் விசா அல்லது ரத்தான விசாவின் நகல் ஆகியவற்றை சமர்பிக்கவேண்டும் எனவும், அமீரகத்திற்கு ஆன்லைன் மூலமாக வந்திருப்பவர்கள், PASSPORT நகல், மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றைமட்டும் சமர்பித்தால் போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக விண்ணப்பிக்கக்கூடியவர்களாக இருந்தால், அவர்கள் தங்களது RESIDENCY VISA நகலை சமர்பிக்கவேண்டியிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது
எனினும் அவசர காலங்களில், TRAVEL AGENCY கள் கூடுதல் கட்டணங்களுடன், உடனடி சேவைகளை வழங்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.