SAUDI ARABIAUAE

தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு விடுப்பு | Jawwy Special Mobile Number Offers

தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு விடுப்பு | Jawwy Special Mobile Number Offers

Saudi News

பொது மற்றும் தனியார் துறை மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு,  அவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் வரை அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டு,  அந்த நாட்களானது அவர்களது ஆண்டு விடுமுறை கணக்கிலிருந்து கழிக்கப்படும் என்றும் மேலும் இந்த செயல்முறையானது  ஆகஸ்ட் 9 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் சவுதி அரேபியாவின்  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

சவூதி அரேபியாவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட விதிகளை மீறி,  Covid-19 பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளுக்கு 500000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரசு வழக்கறிஞர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இடையேயான எத்திஹாத் விமானங்கள் “மறு அறிவிப்பு வரும் வரை” நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி விமான நிறுவனம் அறிவித்துள்ளது. சவுதி அரசின் சமீபத்திய உத்தரவுக்கு இணங்க ஆகஸ்ட் 10 வரை அபுதாபி மற்றும் சவுதி அரேபியா இடையேயான விமானங்களையும் எத்திஹாத் ரத்து செய்துள்ளதாகவும் மேலும் இந்த தேதியானது அரசாங்க உத்தரவுகளுக்கு ஏற்ப நீட்டிக்கப்பட வேண்டும்,” என்று Etihad அதன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

See also  இன்றைய சவுதி அரேபியா செய்திகள்

Read More: சவுதி சுற்றுலா விசா பெற 4 நிபந்தனைகள் – Gulf Tamil News Today

தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு விடுப்பு Jawwy Special Mobile Number Offers

Covid-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற பிறகு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், இரண்டாவது தடுப்பூசியைப் பெற தேவையான காலத்தை சவுதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம், நிர்ணயித்துள்ளது. அதன்படி தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற பிறகு, கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், தற்போதைய பரிந்துரைகளின்படி, குறைந்தபட்சம் 10 நாட்களுக்குப் பிறகு அவர் தனது 2 வது டோஸைப் பெறலாம் என சுகாதார அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ள மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் “தொலைதூர வாடிக்கையாளர் சேவைத் தொழிலை சவுதிக்குக் கட்டுப்படுத்தும்” முடிவுக்கு குறிப்பிட்ட சலுகைக் காலம் முடிவடைவதாக அறிவித்துள்ளது. மேலும் நேரடி அல்லது மறைமுக ஒப்பந்தம் மூலம், தொழிலாளர் சந்தையில் செயல்படும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பொருந்தும் என்பதால், இந்த முடிவை இன்று முதல் அமல்படுத்தத் தொடங்குவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்டோராடோ வானிலை வலைத்தளத்தின் (Eldorado Weather website), அறிவிப்புப்படி, 13 அரபு நகரங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கியுள்ளதாகவும், உலகின் 15 மிக உயர்ந்த வெப்பநிலையை கொண்ட நகரங்களில் குவைத் 1 வது இடத்திலும், ஈராக் இரண்டாவது இடத்திலும், சவுதி அரேபியா, ஈரான் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

See also  தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தவக்கல்னா நடைமுறைகள் என்ன?
UAE News

கொரோனாவிற்கு எதிராக போடப்படும் சினோஃபார்ம் தடுப்பூசியை 3 முதல் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இப்போது வழங்கலாம் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம்  அறிவித்துள்ளது. விரிவான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மதிப்பீடுகளை நடத்தியதற்குப் பின்னரே குழந்தைகளுக்கான சினோஃபார்ம் கொரோனா தடுப்பூசியின் அவசர பதிவுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் சக வாகனவோட்டிகள், சாலை உபயோகிப்பாளர்கள், முதியவர்கள், குழந்தைகள், ஆகியோரை அச்சுறுத்தும் வகையில் சப்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை இயக்கிய 770 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி போக்குவரத்து காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்கும் விதமாகவும், மாற்றுத் திறனாளிகள் எளிதில் தங்களுக்கான சேவைகளைப் பெறும் நோக்கத்திலும், துபாய் RTA வின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் சக்கர நாற்காலிகளுடன் கூடிய சிறப்பு கேபினெட்களை அமைத்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

See also  Using VPN is Legal in UAE? What is the Conclusion?

Trending Now: Gulf Tech & News

தடுப்பூசி பெறாத ஊழியர்களுக்கு விடுப்பு Jawwy Special Mobile Number Offers

Technology News

Jawwy mobile network என்பது STC இன் புதிய மொபைல் திட்டம் ஆகும், இது முழுக்க முழுக்க டிஜிட்டல் ஆப் மூலம் செயல்படுகிறது.

இப்போது Jawwy mobile network ல் உங்களுக்கு பிடித்த பிரத்யேகமான மொபைல் எண்களை ஆன்லைனில் வாங்க முடியும். நீங்கள் Jawwy பிரீமியம் எண்ணை வாங்கும்போது, அதனுடன்  20 ஜிபி டேட்டா, 3,000 உள்ளூர் நிமிடங்கள் மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற சமூக தரவையும் பெற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள(https://pages.jawwy.sa/vanity/en/) Jawwy வலைத்தளம் வழியாக உங்களுக்கு பிடித்த பிரத்யேகமான மொபைல் எண்களை ஆன்லைனில் வாங்க முடியும்.

கூடுதலாக, குறிப்பிட்ட தொலைபேசி எண்களைத் தேடவும் இந்த வலைத்தளத்தில் அனுமதி அளிக்கப்படுகிறது.

உங்களுக்கு பிடித்த ஒரு Jawwy வேனிட்டி எண்ணைத் தேர்ந்தெடுத்தவுடன், அதை குறிப்பிட்ட முகவரிக்கு டெலிவரி அல்லது அருகில் உள்ள கடையில் பிக்-அப் தேர்வு செய்யவும், அடுத்த கட்டமாக கிடைக்கக்கூடிய கட்டண முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி பணம் செலுத்தவும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button