சவுதி சுற்றுலா விசா பெற 4 நிபந்தனைகள்

சவுதி சுற்றுலா விசா பெற 4 நிபந்தனைகள் – Gulf Tamil News Today
சவுதி சுற்றுலா விசா பெற 4 நிபந்தனைகள்
சுற்றுலாப்பயணிகள் பின்வரும் அளவுகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
2 doses of Pfizer BioNTech.
2 doses of Oxford AstraZeneca.
2 doses of Moderna.
1 dose of Johnson s Janssen.
2 doses of Sinopharm + 1 dose of either Pfizer, AstraZeneca, Johnsons Janssen, or Moderna.
2 doses of Sinovac + 1 dose of either Pfizer, AstraZeneca, Johnsons Janssen, or Moderna.
சுற்றுலா பயணிகள் முழுமையாக தடுப்பூசி போடப்படுவதால் நிறுவன தனிமைப்படுத்தல் இல்லை.
சுற்றுலாப் பயணி சவூதி அரேபியாவுக்கு வருவதற்கு முன்பு முகீம் தடுப்பூசி பதிவை முடிக்க வேண்டும்.
boarding pass ஐ பெற விமான பயணத்திற்கு 72 மணி நேரத்திற்குள் எடுத்த எதிர்மறை PCR சோதனையை காண்பிக்க வேண்டும்.
சவுதி சுற்றுலா விசாவிற்கு எப்படி விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகள் சவுதி சுற்றுலா விசாவிற்கு visitsaudi.com மூலம் விண்ணப்பிக்கலாம்.
Saudi Arabia News
இராச்சியத்திலிருந்து இயங்கும் தனியார் மற்றும் பொது விமான நிறுவனங்களுக்கு, மற்ற நாடுகளுக்கு பயணிக்கும் நடைமுறை குறித்து புதிய புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை தி சவுதி ஜெனரல் அத்தாரிட்டி ஆஃப் சிவில் ஏவியேஷன் வெளியிட்டுள்ளது. புதிய புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, சவுதி Authority யால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில், ஒன்றின் இரண்டு அளவுகளையும் எடுத்துக்கொண்ட பயணிகளை மட்டுமே விமான நிறுவனங்கள் கொண்டு செல்ல முடியும் என்றும் இது 12 வயதுக்குட்பட்ட பயணிகளுக்கு பொருந்தாது எனவும், இருப்பினும், 12 வயதுக்குட்பட்ட பயணிகள் மற்ற நாடுகளில் எழும் கோவிட் தொற்று அபாயத்தை உள்ளடக்கிய சவுதி மத்திய வங்கியால் வழங்கப்பட்ட காப்பீட்டு ஆவணத்தை வழங்க வேண்டும் என்றும் ஏவியேஷன் அத்தாரிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 13 தடை செய்யப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவிற்கு சுற்றுலா விசா பெற முடியுமா? என்றால் ஆம், யார் வேண்டுமானாலும் சுற்றுலா விசாவைப் பெறலாம். எவ்வாறாயினும், பின்வரும் 13 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து சுற்றுலா வருபவராக இருந்தால், அவர் சவுதி அரேபியாவில் நுழைவதற்கு முன்பு 14 நாட்கள் வேறு நாட்டில் செலவிட வேண்டும்.
Read More: Updated Green List Countries – Abudhabi
UAE News
கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் அமீரகம் வரத் தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில், இந்தியாவில் சிக்கிக்கொண்ட அமீரகவாழ் இந்தியர்கள் தங்களது வேலை பறிபோய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.
இதன்காரணமாக பிற நாடுகளுக்குச் சென்று அங்கே 14 நாட்கள் செலவிட்டு பின்னர் அங்கிருந்து அமீரகம் வருவதை பல இந்தியர்கள் கடைபிடித்துவருகின்றனர். இப்படி, பல இந்தியர்கள் முயற்சிக்கையில் அவர்களது முக்கிய தேர்வாக கத்தார் இருக்கிறது.
முழுவதும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சர்வதேச சுற்றுலாப் பயணிகள் கத்தாருக்கு வரலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது தான் இதற்குக் காரணம்.இதனால் பல இந்தியர்கள் கத்தார் சென்று பின்னர் அங்கிருந்து எமிரேட்ஸ், ஃப்ளை துபாய் மற்றும் கத்தார் ஏர்வேஸ் மூலமாக அமீரகத்திற்கு வருகின்றனர்.இதுபோன்ற பயணங்களுக்கு இந்தியர்கள் 4000 – 6000 திர்ஹம்ஸ் வரையில் செலவழிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – அமீரகம் இடையே நேரடி விமானப் போக்குவரத்து தடையில் உள்ளதால் மூன்றாம் நாடுகளின் வழியாக அமீரகத்திற்குள் நுழைய இந்தியர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் மாறுபடுகிறது. ஆகவே பணம் செலுத்துவதற்கு முன்பே சரியான தகவல்களை கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்” என ஃபாரவர் டூரிசம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
Watch More: Gulf Tech & News
5G சேவையின் வேகம் குறித்து அண்மையில் OOKLA எனும் தொலைதொடர்பு நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, உலகின் முன்னணி நகரங்களை பின்னுக்குத் தள்ளி அதி வேக 5G சேவை வழங்கும் தலைநகரங்களின் பட்டியலில் அமீரகத்தின் அபுதாபி 3ம் இடத்தை பிடித்துள்ளது என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மஜீத் சுல்தான் தெரிவித்துள்ளார்.
மேலும் 5G சேவையில் கொடிகட்டிப் பறக்கும் டாப் 10 நகரங்களில் 5 நகரங்கள் அரபு நாடுகளை சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது.